காலுக்கு கொலுசு போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கா? இது தெரியாம போச்சே
ஆரம்பக் காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது.
தற்போது, மீண்டும் பெண்கள் அனைவரும் கொலுசு அணிய தொடங்கியுள்ளனர். அதிலும் ஒற்றைக் காலில் கொலுசு அணிவதுதான் இன்றைய ஃபேஷனாக மாறிவிட்டது.
ஆளால் யாரும் காலில் எதற்காக கொலுசு போடுகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை அறிவதில்லை. பொதுவாக நம் முன்னோர்கள் ஒரு விடயம் சொன்னால் அது சரியான காரணத்துடன் தான் இருக்கும்.
அந்த வகையில் காலில் கொலுசு போட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என சொல்லப்படுகின்றது. அது என்ன நன்மைகள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கொலுசு போடுவதன் நன்மைகள்
இன்றைய காலத்தில் சில பெண்கள் வெள்ளி கொலுசிற்கு மாற்றாக தங்க கொலுகள் அணிவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். தங்கம் வாங்குவது ஓர் சேமிப்பாக இருந்தாலும் காலிற்கு கொலுசு அணிவது உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை தருகின்றது.
பெண்களுக்கு உடலின் வெப்பநிலையானது எப்போதும் சீராக இருக்காது. இதனால் வயிற்று வலி போன்ற பல உடல் நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

எனவே வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை, நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
உடலின் வெப்பநிலை சீராக இருந்தாலே எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. எனவே தங்கத்தை விட வெள்ளியில் கொலுசு அணிதல் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

இளம் வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கொலுசு அணிவிக்கிறோம். இதற்கான காரணமும் உள்ளது.
குழந்தைகள் நடக்கும் போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் கண்காணிப்பதற்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.
இந்த காரணத்தினால் தான் குழந்தை நடக்க ஆரம்பித்தவுடன் கொலுசு போடுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
கணுக்காலை உரசும் அளவிற்கு அணியும் வெள்ளி கொலுசுகள் தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்துகிறது என கூறப்படுகின்றது. எனவே நாள் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றும் குடும்ப பெண்கள் முதல் பணிக்குச் செல்லும் பெண்கள் வரை பலரும் கால் வலியால் அவதிப்படுவார்கள்.

இவற்றைச் சரி செய்ய வெள்ளி கொலுகள் அணியலாம். வெள்ளியில் உள்ள ஆற்றல் கால் வலியைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் எவ்வித உடல் நல பாதிப்பையும் ஏற்பட வாய்ப்பில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |