எலும்பு ஆரோக்கியத்திற்கு துணைப்புரியும் வைட்டமின் D4: இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்
பொதுவாக வைட்டமின் சத்துக்கள் அவ்வளவு எளிதில் பெற கூடியதல்ல.
மேலும் இயற்கையான முறையில் வைட்டமின் டி கிடைப்பதால் அது நம்முடைய சரும பாதுகாப்பை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.
சூரிய ஒளியை தவிர்த்து முட்டையின் மஞ்சள் கருக்கள் மற்றும் வைட்டமின் டி-செறிவூட்டப்பட்ட பால் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட உணவுகளில் வைட்டமின் டி சத்துக்கள் இருக்கின்றன.
இந்த வைட்டமின்களின் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உரிய மருத்துவரை நாடி அதற்கான மாற்றீடு வில்லைகளை எடுத்து கொள்ளலாம்.
அந்த வகையில் வைட்டமின் டி4 தொடர்பில் மேலதிக தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
வைட்டமின் டி4 எதற்கு நல்லது?
வைட்டமின் டி4 கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினாக பார்க்கப்படுகின்றது. மேலும் உடலில் இருக்கும் உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைத்து கொள்ள உதவுகிறது.
அத்துடன் எலும்புகள் தொடர்பான நோய்களிலிருந்து விடுபெறுவதற்காக வைட்டமின் டி4 தேவைப்படுகின்றது. வைட்டமின் டி புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைக் குறைக்கும், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கின்றது என மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
வைட்டமின் டி4 எப்போது எடுக்க வேண்டும்?
வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடியது என்பதால் தண்ணீரால் கரைக்க முடியாது.
வைட்டமின்கள் நிறைந்த வெண்ணெய், முட்டை மற்றும் விதைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பொழுது உடல் வைட்டமின் டியை நன்றாக உறிஞ்சுகிறது.
சப்ளிமெண்ட்களை காலை அல்லது மதிய உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம். இதனை தவறும் பட்சத்தில் பிற்பகல் சிற்றுண்டியுடன் கூட எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் டி4 உள்ள உணவுகள்
- சால்மன்
- கானாங்கெளுத்தி மற்றும் மத்தி உள்ளிட்ட எண்ணெய் மீன்
- முட்டையின் மஞ்சள் கரு
- சிவப்பு இறைச்சி
- கல்லீரல்
- தானியங்கள்
- தாவர பால்
வைட்டமின டி4 குறைந்தால் என்ன நடக்கும்?
வைட்டமின் டி4 குறைபாடு ஏற்படும் போது எலும்புகள் வலுவிழக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
வைட்டமின் டி4 வின் ஆரோக்கிய நன்மைகள்
1. மனித உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வைட்டமின் டி4க்கு உள்ளது. இதனால் உடலிலிருந்து தாக்கும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.
2. ஆய்வுகளின் படி மனச்சோர்வு மற்றும் பருவகால பாதிப்புக் கோளாறு ஆகிய பிரச்சினைகளில் தாக்கம் செலுத்துகின்றது.
3. இதய நோய்களின் பாதுகாப்பிற்கும் வைட்டமின் டி 4 தேவைப்படுவதாக ஆராய்ச்சிகளின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
4. புற்றுநோய் ஆபத்தையும் வைட்டமின் டி கட்டுத்துபடுத்துகின்றதாம்.
முக்கிய குறிப்பு
வைட்டமின் டி ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றாலும், அதிகப்படியான நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதனை கவனித்தில் கொள்ளவும்.
மேலும் வைட்டமின் டி வயது, பாலினம் மற்றும் சுகாதார நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். இதனால் உங்களுக்கு என்ன தேவை என்பதனை சுகாதார நிபுணருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |