அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வளிக்கும் Aluminium Hydroxide Tablet
அசிடிட்டி, வயிற்றுப்புண், குடல் புண் உட்பட வயிறு சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது Aluminium Hydroxide மாத்திரைகள்.
வயிற்றில் அமில சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் இது தீர்வளிக்கிறது. இது தற்காலிகமானது தான்.
அடிவயிற்றில் வலி, வயிற்றுப்பிடிப்பு, வாயுத்தொல்லை, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் இருந்தால் Aluminium Hydroxide Tablet யை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே எந்தவொரு மருந்தையும் உட்கொள்ள வேண்டும், சுயமாக எடுத்துக் கொள்வது ஆபத்தை உண்டுபண்ணும்.
Aluminium Hydroxide Tabletகளை இரண்டு வாரங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகளை தீவிரப்படுத்தலாம்.
மற்ற மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், அதற்கு முன்போ அல்லது பின்போ 2 மணிநேரம் கழித்தே Aluminium Hydroxide Tabletகளை போட்டுக்கொள்ளவும்.
இது மற்ற மாத்திரைகளுடன் சேர்ந்து எதிர்வினைகளை உண்டுபண்ணலாம். இம்மாத்திரைகள் antacids போல செயல்படக்கூடியது, வயிற்றில் அமில சுரப்பை சீர்படுத்துவதன் மூலம் அசிடிட்டிக்கு தீர்வளிக்கும்.
இது பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரின் முறையான பரிந்துரையின்படி எடுக்கவும், அல்சைமர் உட்பட மற்ற நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
இதயநோய், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் கேட்டுவிட்டு பயன்படுத்தவும்.
இதேபோன்று கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல் Aluminium Hydroxide Tabletகளை எடுக்க வேண்டாம்.
இம்மாத்திரைகள் பயன்படுத்தும் போது ஆல்கஹாலை தவிர்க்கவும், appendix அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் இது பாதுகாப்பானது அல்ல.