மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மாலினி.. கதிகலங்கிய செழியன்- பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன?
மாலினி, செழியன் வாழ்க்கைக்குள் மீண்டும் வந்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
பாக்கியா நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு பொருட்காட்சியக கேன்டீனை பெற்று வேலையை துவங்குகிறார். இதற்காக ஈஸ்வரியை தவிர்த்து வீட்டிலுள்ள அனைவரும் சென்று தன்னால் முடிந்த உதவியை செய்கிறார்கள்.
இதனை பொருத்து கொள்ள முடியாத கோபி அவரின் பிரச்சினைகளை தூர வைத்து விட்டு பாக்கியா என்ன செய்கிறார் என்பதனை பார்த்து பொறாமைப்பட்டு கொண்டிருக்கிறார்.
இப்படியொரு பக்கம் கதை சென்றுக் கொண்டிருக்கையில் செழியன் வாழ்க்கைக்குள் மீண்டும் மாலினி வந்துள்ளார்.
அதிரடி என்றி கொடுத்த மாலினி
ஜெனியின் அப்பா கதாபாத்திரம் சீரியலுக்குள் வந்துள்ள நிலையில், இனி செழியனின் வாழ்க்கை எப்படி இருக்க போகின்றது என ரசிகர்கள் எதிர்பார்த்த போது மாலினி என்றி கொடுத்துள்ளார்.
தெரியாமல் செய்த ஒரு தவறிற்காக குழந்தை, மனைவி பக்கத்தில் இல்லாமல் செழியன் தவித்து வருகிறார். பாக்கியாவின் வியாபாரத்திற்கு உதவி செய்து கொண்டு தனது அம்மாவுடன் இணைந்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் ஜெனியின் அப்பா செழியனை பார்க்க வருவதை தெரிந்து கொண்ட மாலினி அவர் முன்னாள் செழியனுடன் உறவில் இருப்பது போன்ற ஒரு நாடகத்தை காட்டி ஜெனியின் அப்பாவை கடுப்பாக்கி விடுகிறார்.
இவற்றை தாங்கிக் கொள்ள முடியாத செழியன் பாக்கியாவிடம் சொல்லி அழுகிறார்.
இதனை தொடர்ந்து மகனின் வாழ்க்கைக்காக பாக்கியா என்ன செய்ய போகிறார் என்பதனை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |