எலும்பு ஆரோக்கியத்திற்கு துணைப்புரியும் வைட்டமின் D2 : இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்
பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வைட்டமின்களுள் வைட்டமின் டி சத்து முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் பிரிவுகளுள் ஒன்றான வைட்டமின் டி2 எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைப்புரிகின்றது.
இதனை நாம் சூரிய ஒளியின் மூலமும் ஒரு சில உணவுகளின் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் டி2 எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமாக தேவைப்படுகின்றது.
நமது உடலின் கால்சியம், பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பராமரிக்க உதவுகின்றன.
வைட்டமின் டி 2 வை எவ்வாறு பெறலாம்?
சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி சத்துக்களை பெறுவதற்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் சுமார் 5 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை சூரிய ஒளியில் உடலை காண்பிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் சூரிய ஒளி அரிதாகவே கிடைக்கிறது. மேலும் குளிர்காலங்களில் நம்மால் அதிகமாக சூரிய ஒளியைப் பெற முடிவதில்லை. எனவே இந்த சமயங்களில் நாம் வைட்டமின் டியை உணவின் வழியாக பெற வேண்டி உள்ளது.
பொதுவாக நாம் விலங்கு வழியாக கிடைக்கும் மாட்டுப் பால் மற்றும் ஆட்டுப் பால் போன்ற பால் வகைகளை பயன்படுத்துகின்றோம்.
ஆனால் தாவரங்களிலிருந்தும் பால் கிடைக்கிறது. சோயா, தேங்காய், பாதாம், ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து நம்மால் பால் தயாரிக்க முடியும். இவ்வாறான பாலில் இருந்து வைட்டமின் டி2 வை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆரஞ்சு ஜூஸ் வைட்மின் டி2 வை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த மூலமாக காணப்படுகின்றது. பொதுவாக 250 மி.லி ஆரஞ்சு சாறில் 2.5 எம்.சி.ஜி வைட்டமின் டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
கானாங்கெளுத்தி மீன் வைட்டமின் டி யின் முதன்மை ஆதாரமாக இருக்கின்றன. ஏனெனில் அவை கல்லீரல் மற்றும் கொழுப்பு திசுக்களில் அதிகமான அளவில் வைட்டமின் டி யை சேர்த்து வைக்கின்றன. ஒவ்வொரு 100 கிராம் கானாங்கெளுத்தி மீனிலும் 13.8 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது.
தினசரி தேவையான அளவை விட இது அதிகமான அளவாகும். எனவே தினசரி கானாங்கெளுத்தி மீனை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டியை பெற முடியும்.
அதிகபட்சம் வைட்டமின் டி சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்பகின்றது. அவற்றை முழுவதுமாக சாப்பிட வேண்டும். முடிந்த அளவு வெளியில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டையை பயன்படுத்துவது சிறந்தது. பண்ணை முட்டையை விட இவற்றில் வைட்டமின் டி அதினமான இருக்கின்றது.
காளான் தாவர அடிப்படையிலான வைட்டமின் டி உணவுகளில் முக்கியமான உணவாகும். 100 கிராம் காளானில் 0.2 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது. மனிதர்களை போலவே இவையும் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டியை உற்பத்தி செய்கின்றன. மேலும் இவை வைட்டமின் டி3 ஐ விட டி2 வை அதிகமாக உற்பத்தி செய்கின்றன.
ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய் :தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
சால்மன் மீன் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மீன் ஆகும். ஒவ்வொரு 100 கிராம் சால்மன் மீனிலும் 10.9 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது. எனவே வைட்டமின் டியை பெறுவதற்கு சரியான ஆதாரமாக சால்மன் உள்ளது.மேலும் நமது இதயம், மூளை மற்றும் தைராய்டு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது.
மாட்டிறைச்சியின் கல்லீரலில் 1.2 எம்.சி.ஜி அளவில் வைட்டமின் டி உள்ளது. இது வைட்டமின் டி2 வை பெற்றுக்கொள்ள சிறந்த மூலமாக காணப்படுகின்றது.
வைட்டமின்-டி குறைபாட்டைச் சரிசெய்யாவிட்டால் சர்க்கரைநோய், எலும்பு அழற்சி, எலும்புப் புரை, தசை வலுவிழப்பு, தசைவலி, எலும்பு சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய் மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுப்பிரச்சினைகள், நுரையீரல் பிரச்சினைகள், முடக்குவாதம், எலும்பு முறிவு போன்றவை ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |