Vitamin B7- கரு வளர்ச்சிக்கு உதவும் பயோடின்: இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்
பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கும் நம் அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்யவும் நமக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
அந்தவகையில் பயோட்டின் எனப்படும் வைட்டமின் பி7, உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.
இது கண், முடி, தோல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமானது. குறித்த வைட்டமின் எந்த உணவுகளில் காணப்படுகின்றது என்பது குறித்து பயோட்டினின் முக்கியத்துவம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பயோடினின் முக்கியத்துவம்
பயோடின் கல்லீரல் செயல்பாட்டையும் சீர் செய்வதில் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. பயோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின், அதாவது அது உங்கள் உடலில் சேமித்து வைக்கப்படாது எனவே உடல் ஆரோக்கியத்திற்காக பயோட்டினை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக ஒரு நாளைக்கு 30 கிராம் மட்டுமே தேவைப்படுகின்றது. எனினும், வைட்டமின் B7 குறைபாட்டைத் தடுக்க தினசரி ஒரு முட்டை சிறந்த தீர்வாக இருக்கும். முட்டையில் பி வைட்டமின்கள், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. முட்டையின் மஞ்சள் கரு பயோட்டின் சிறந்த மூலமாகும்.
ஒரு முழு வேகவைத்த முட்டையில் (50 கிராம்) 10 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது, இது உங்களுக்கு தினசரி தேவையில் 33 சதவீதத்தை வழங்குகிறது. உங்களுக்கு வைட்டமின் பி7 தேவைப்பட்டால் முட்டையின் மஞ்சள் கருவை பச்சையாக சாப்பிடலாம்.
உலர் பழங்கள் மற்றும் விதைகள் நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு மற்றும் புரதத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகின்றன. இது உங்களுக்கு அதிக அளவு வைட்டமின் B7 இன் தேவையை பூர்த்தி செய்கின்றது.
ஒரு 1/4-கப் (20-கிராம்) வறுத்த சூரியகாந்தி விதையில் 2.6 மைக்ரோகிராம் B7 உள்ளது, அதே சமயம் 1/4-கப் (30-கிராம்) வறுத்த பாதாமில் 1.5 மைக்ரோகிராம் பயோட்டின் கிடைக்கும். எனவே இதை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
சக்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, 1/2-கப் (125-கிராம்) சமைத்த சக்கரை வள்ளிக்கிழங்கில் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி7 உள்ளது. இது தினசரி தேவையில் 8 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றது.
காளான்களில் வைட்டமின் பி7 நிறைந்து காணப்படுகின்றது. சுமார் 120 கிராம் சேமித்து வைக்கப்பட்ட காளான்களில் 2.6 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது.
இது தினசரி தேவையில் 10 சதவீதம் ஆகும். 1 கப் (70 கிராம்) பிரெஷ் காளான்களில் 5.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி7 உள்ளது. இது தினசரி தேவையில் 19 சதவீதத்தினை பூர்த்தி செய்கின்றது.
கூடுதலாக பயோட்டின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது. நல்ல கொழுப்பு அளவை அதிகரிப்பதால் இதயத்தை பாதுகாக்கிறது. உடலில் தசை ஆரோக்கியம் மற்றும் பழுதுபார்க்க பயோட்டின் அவசியம்.
பயோட்டின் என்பது மூளை, கண்கள், தோல், முடி, நகங்கள், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு அவசியம். இது கர்ப்பகாலத்தில் முக்கியமானது.
இது கருவளர்ச்சியை ஆதரிக்க செய்கிறது. பயோட்டின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது முடி, தோல் மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகளை பெறவும் இவை பெரிதும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |