வீசப்படும் பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் வீணாக்காதீர்கள்
பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே.
ஆனால் நாம் பூண்டை சமையலுக்கு பாவித்துவிட்டு வீணாக வீசும் பூண்டு தோலிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருகின்றது என கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் பூண்டு தோல் அலப்பரிய மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டு தோலின் நன்மைகள்
பூண்டு தோல்களில் உடலுக்கு தேவையான வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இது சரும பிரச்சனைகளை போக்குகிறது. பூண்டு தோலை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து தோல் பிரச்சனைகள் உள்ள இடங்களில் தடவினால் தோல் நோய்கள் எளிதில் குணமாகும்.
சாம்பிராணி தூபம் போடும் போது அந்த தூபத்தில் பூண்டு தோல்கள் சேர்த்து போட்டால் அந்த புகையிலிருந்து ஒருவிதமான வாசம் வரத்தொடங்கும். இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்கலாம். அந்த புகையை நாம் சுவாசிக்கும் போது நமக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தீர்வு கொடுக்கும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பூண்டு தோல் தூபத்தினை வீட்டில் பயன்படுத்தி வரலாம்.சிறு குழந்தைகளுக்கு தலைக்கு குளிப்பாட்டிய பின்பும் கூட இந்த தூபத்தை போடலாம். இது குழந்தைகளை சளி தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் தலையில் நீர்கோர்த்தல் பிரச்சினைக்கு, நிரந்தர தீர்வு கிடைக்க இந்த பூண்டு தோல் சாம்பிராணி தூபம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் பூண்டு தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து தலைமுடிக்கு தடவினால் பொடுகு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
பூண்டு தோல்களை நன்றாக அரைத்து அந்த கலவையை தேனுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சினைக்கு எளிதில் நிவாரணம் பெறலாம்.
பூண்டு தோலை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் ஊறவைத்து அந்த தண்ணீரில் முகம் கழுவினால் முகப்பருக்கள் வருவதை தவிர்த்துக்கொள்ள முடியும். மேலும் பாக்டீரியாக்களால் ஏற்படக்கூடிய சரும பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |