புளியில் மறைந்திருக்கும் மருத்துவகுணம் பற்றி தெரியுமா? இனிமேல் தவிர்க்காதீர்கள்
அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் தான் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் அளப்பரிய ஊட்டச்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் நிறைந்து காணப்படுகின்றது.
வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
நமது உணவில் ருசியாக்கும் புளியின் புளிப்பு சுவை பலருக்கும் பிடித்தமானது. புளி சாதம் என்றாலே வாயில் எச்சில் ஊறும்.
ருசியைக் கொடுக்கும் புளி, ஆரோக்கியத்திற்கு எந்தளவு துணைபுரிகின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
புளி தரும் அற்புத நன்மைகள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை புளியில் ஏராளமாக உள்ளன.
புளியில் ஹைட்ரோசிட்ரிக் அமிலம் இருப்பதால், புளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் கொழுப்பு விரைவாக குறையும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் புளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த தீர்வு கொடுக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் புளி உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கொண்டது புளி.
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி பலப்படுத்தும் உணவுப் பொருட்களில் புளிக்கும் முக்கிய இடம் உண்டு.
புளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும், திரவத்தை சமநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.
இதில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவற்றில் சில கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் ஆண்களின் விந்து தரம் மற்றும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனளர்.
இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் புளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. ஏனென்றால், இதில் இருக்கும் மெக்னீசியம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இதிலுள்ள சிறப்பு பண்புகள் பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதனால் பங்கஸ் நோய் தாக்கங்களில் இருந்தும் உடலை பாதுகாக்கின்றது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளி நமது அன்றாட உணவில் சுவையை சேர்க்கிறது, அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வெறும் புளிப்பு சுவை கொண்ட பழம் மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்கான அற்புதமான பழம் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |