பப்பாளி விதையில் மறைந்திருக்கும் மருத்துவம்... எத்தனை நன்மைகள் தெரியுமா?
பொதுவாகவே சில பழங்களை சாப்பிட்டால் அதினுள் இருக்கும் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம் அவ்வாறு தூக்கி எறியும் பழ விதைகளில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது தெரியுமா? தெரிந்தால் அவற்றை இனி எறியவே மாட்டீர்கள்.
அதேபோல் நீங்கள் சாப்பிட்டு விட்டு தூக்கிப் போடும் பப்பாளி பழத்திலும் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டு.
பப்பாளிபழ விதை
ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் பப்பாளி பழமும் ஒன்றாகும். பப்பாளி பழ விதையில் புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் அவற்றில் உள்ளன.
பப்பாளி விதைகளில் ஒலிக் அமிலம் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளையும் கொண்டிருக்கின்றன.
நன்மைகள்
1. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்
2. வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவும்
3. உடல் பருமனை கட்டுக்குள் வைக்க உதவும்
4. குடலில் உள்ள புழுக்கள், பக்ரீரியாக்களை அழிக்கும்
5. மலச்சிக்கலைத் தடுக்கும் 6.குடல் இயக்கத்தை மேம்படுத்தும்
7. உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்
8. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
9. புற்றுநோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்
10. மாதவிடாய் வலியைக் குறைக்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |