தூக்கி வீசும் எலுமிச்சை தோலில் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா?
பொதுவாக நாம் சில பொருட்களை தேவையில்லை என வீசுவார்கள். ஆனால் அதனை பயன்படுத்தி எண்ணற்ற பிரச்சினைகளை சரிசெய்ய முடியும்.
இந்த வரிசையில் எலுமிச்சை தோலும் முக்கிய இடம் பிடிக்கிறது.
மேலும் தன்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எலுமிச்சை தோல் ஒரு அழகுப்படுத்தும் மூலிகையாக பார்க்கப்படுகிறது.
எலுமிச்சைத் தோலில் இருக்கும் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நம்மை அழகுப்படுத்துடன், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
அந்த வகையில் எலுமிச்சைப்பழ தோலிலிருந்து கிடைக்கும் நன்மைகளையும் அதிலிருந்து எவ்வாறு பயனை பெற்றுக் கொள்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
எலுமிச்சை தோல் வைத்து செய்யும் ப்யூட்டி டிப்ஸ்
1. பொதுவாக காலையில் சிலர் எழும்பும் போது சோம்பலாக இருப்பார்கள். எலுமிச்சம் பழத்தோலை குளிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் உடலில் இருக்கும் சோம்பல் மறைந்து புத்துணர்ச்சி பெறும்.
2. அக்குள் மற்றும் தொடையின் இடுக்குகளில், அதிக வியர்வையினால் பக்டீரியா தொற்று ஏற்பட்டு கருமையாக இருக்கும் அப்போது, அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்து விட்டு, பிறகு எலுமிச்சை தோல் வைத்து அந்த இடத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் காலப்போக்கில் கருமை மறையும்.
3. எலுமிச்சைப்பழ தோலையும், தேனையும் முகத்தில் தேய்த்து வந்தால் முகத்திலுள்ள தேவையில்லாத பக்ரியாக்கள் காலப்போக்கில் குறையும்.
4. முகப் பொலிவு குறைவு பிரச்சினை இருப்பவர்கள் எலுமிச்சைத் தோல், புதினா இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
5. முகத்தில் இறந்த செல்கள் தேங்கி இருப்பவர்கள் எலுமிச்சை தோல் பொடி 3 டீஸ்பூன் , ஓட்ஸ் பொடி3 டீஸ்பூன் , தேன் 2 டீஸ்பூன் , ரோஜா பன்னீர் 2 டீஸ்பூன் ஆகிய பொருட்களை சேர்த்து ஒரு கலவையாக கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு ஸ்கிரப் செய்தால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி முகம் ஜொலிக்க ஆரம்பிக்கும்.
6.பெண்கள் தன்னுடைய கை, கால்களுக்கு மெனிக்யூர், பெடிக்யூர் செய்ய வேண்டிய நிலைமை வந்தால் எலுமிச்சைப் பொடியை தண்ணீரில் போட்டு சூடு தண்ணீரை பயன்படுத்தி கழுவினால் ப்யூட்டி பாலரில் செய்தால் போல் ஒரு அழகை பெற முடியும்.
7. தன்னுடைய ஹேரை கலரிங் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எலுமிச்சை தோல் பொடி, மருதாணிப் பொடி ஆகியவற்றை கலந்து தலை முடிக்கு 'ஹேர் டை' போல் பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கை நிறமாக வரும்.