குப்பையில் தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் சி என பல காரணங்களுக்காக நம் அன்றாட உணவுகளில் சேர்த்து வருகிறோம். ஆனால், எலுமிச்சை தோலில் உள்ள நன்மைகளை நாம் அறிந்திருக்கிறோமா என்றால், இல்லை என்பதே பதில்.
எலுமிச்சை தோலில் எண்ணிலடங்கா மருத்துவப் பயன்களை கொண்டுள்ளதை நாம் தெரிந்துக் கொண்டால், அதை இனிமேல் தூக்கி எரிய மாட்டோம். எலுமிச்சைத் தோலில் ஆஸ்ட்ரின்ஜென்ட் மற்றும் கிருமிகளைக் கொல்லும் ஆன்டிமைக்ரோபியல் ஆகியவை முகப்பரு வராமல் தடுக்க கூடியது.
இதற்கு, புதினாவுடன் எலுமிச்சை தோலை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை முகத்தில் பூசி வரலாம். கால்சியம் செறிந்துள்ளதால் எலும்புகளை பாதுகாக்கவும் எலுமிச்சை தோல் பயன்படுகிறது.
மேலும், இதிலுள்ள வைட்டமின் சி பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. எலுமிச்சை தோலை கொதிக்கவைத்த நீர் நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும்.
தினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.
சிட்ரிக் பழங்களிலிருந்து வரும் வலுவான நறுமணம் உடல் துர்நாற்றத்தைப் போக்கும், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும். எலுமிச்சைத் தோலின் சாறு, காயங்களைக் குணப்படுத்த உதவும்.
இது பாக்டீரியா பரவாமல் தடுக்கும். தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்டும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது,
இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.