ஜாதிக்காயில் உள்ள ஜாதிப்பத்திரி பூவை சாப்பிடாமல் தூக்கி போடுறீங்களா? அதுல இருக்க சீக்ரெட் இதோ
பொதுவாக இந்திய பாரம்பரியத்தின்படி சமையலுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகு, சீரகம், சோம்பு , ஜாதிக்காய் ஆகிய மசாலா பொருட்களில் ஜாதிப்பத்திரியும் ஒன்று.
இந்த மூலிகையை மற்றைய உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளாமல் பிரியாணியை தவிர வேறு எதற்கும் நாம் பயன்படுத்துவதே இல்லை.
இதனை தொடர்ந்து ஜாதிக்காயின் மேல் தோலை உடைத்தால் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்திற்கு பூ போல இருப்பது தான் ஜாதிப்பத்திரி இதன் உள்ளே இருக்கும் கொட்டை தான் ஜாதிக்காய்.
இந்த பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்திலும் சில பூக்கள் ஆரஞ்சு நிறத்திலும் மற்றும் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். ஆனால் இதன் பயனகள் எல்லாம் ஓரே மாதிரியாக தான் இருக்கும்.
இந்த பூவில் கார்போஹைட்ரேட்,புரதங்கள்,கொழுப்புச்சத்து,நார்ச்சத்துக்கள்,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,ஃபோலேட், நியாசின், பைரிடாக்சின், ரைபோஃபிளவின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அந்தவகையில் ஜாதிப்பத்திரி பூவினால் எமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
முக்கியமான மூன்று பிரச்சினைகளுக்கான தீர்வு
பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களினால் தூக்கமின்மை எற்படும். இதனால் காலையில் உற்சாகமின்மை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வெந்நீரில் ஒரு ஜாதிப்பத்திரியை போட்டு கொதிக்க விட்டு டீ போல போட்டு தயார் செய்து குடித்தால் தூக்கமின்மை பிரச்சினை சரியாகும்.
பொதுவாக சருமப் பிரச்சினகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக ஜாதிப்பத்திரி பூ பயன்படுத்தப்படுகிறது. பிக்மண்டேஷனுக்கு ஒரு சிறச்த தீர்வாகவும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் முகத்திலுள்ள கரும்புள்ளிகள், பருக்களால் ஏற்படும் கருந்திட்டுக்கள் ஆகியவை குறைந்து சருமம் நிறத்தைக் கொடுக்கும். நாம் உணவிற்கு பயன்படுத்தும் வாசனை மசாலாக்களான இலவங்கப்பட்டை, கிராம்பு உள்ளிட்ட பொருள்களை நாம் எடை இழப்புக்காகப் பயன்படுத்துகிறோம்.
அதேபோல் இந்த பூவிலும் நிறைய மினரல்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கிறது இது உடலிருக்கும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் இந்த பூவை வைத்து ஒரு மசாலா டீ செய்து தினமும் காலையில் குடிக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வயதாகும் பொழுது உடலுக்குப் போதிய கால்சியம் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படும்.
இவ்வாறு குறையும் போது எலும்புகள் பலவீனமடைந்து எலும்புகளில் தேய்மானம், எலும்புகள் வலுவிழப்பது ஏற்பட்டு மூட்டுவலி, ஆர்த்தரைடிஸ், கீழ்வாதம் போன்ற பிரச்சினைகள் உருவாகிறது.