பானை வயிறையும் அடித்து விரட்டும் இலவங்கப்பட்டை நீர்! இந்த ஒரு பொருளோடு சோத்து பருகினால் அதிசயம் நடக்கும்
தீபாவளி பண்டிகையான இன்று பல்வேறு இனிப்புகள் வீட்டில் தயாரித்து சுவைத்திருப்போம். அதிகமான கொழுப்பு உணவுகள் தொப்பைக்கு முக்கிய காரணியாகும்.
இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தை சற்று கவனத்தில் கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்று.
இலவங்கப்பட்டை நீர் பானம் நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதுடன் தொப்பையை குறைக்கவும் உதவி புரியும்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
அதில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், பெருஞ்சீரகம் மற்றும் சீரக தூள் சேர்க்கவும்.
10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீரை வடிகட்டி பருகவும்.
இந்த அற்புத பானத்தில் சிறிது சுவையை சேர்க்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
தொடர்ந்து இதனை காலையில் பருகுவதால் கொழுப்பு கரைவதுடன் உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.