தினம் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க... இந்த நோய்கள் கிட்டவே வராது!
பொதுவாக வெங்காயம் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அடங்கிய காய்களில் ஒன்று.
இதில் உடலுக்கு நன்மையளிககும் பல்வகை சேர்மங்கள் நிறைந்திருக்கின்றன.
பொதுவாகவே சைவ உணவுகளாக இருந்தாலும் சரி அசைவ உணவுகளாக இருந்தாலும் சரி வெங்காயம் அதில் முக்கிய இடம் பிடித்து விடுகின்றது.
வெங்காயத்தை சுவைக்காக பல்வேறு சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் பச்சை வெங்காயம் ஏறாளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
அந்த வகையில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
பச்சை வெங்காயத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
குறிப்பாக இந்த குளிர்காலத்தில் வைரஸ் மற்றும் பிற கிருமிகளால் ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.வெங்காயத்தில் இனிப்புத் தன்மை குறைவாக இருப்பதால், நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயம் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் அதிகம் இருப்பதால், அது நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
இது முக்கியமாக நம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு வேலை செய்கிறது. நமது இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் உடலில் இரத்த ஓட்டம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு அல்லது இதய பிரச்சனைகளை தடுக்கிறது.
வைட்டமின் சி உடன், பச்சை வெங்காயத்தில் வைட்டமின் பி 6, வைட்டமின் கே, மாங்கனீஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன, இது நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
பச்சை வெங்காயத்தில் ப்ரீபயாடிக் ஃபைபர் உள்ளது, இது குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இந்த பாக்டீரியாக்கள் நமது செரிமான சக்தியை அதிகரித்து, அதிக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |