மழைக்காலத்தில் மக்காசோளம் சாப்பிடுபவராக நீங்க? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க
கார்ன் எனும் சோளம் நம்மில் பலருக்கும் பிடித்தமான சிற்றுண்டி வகையாக உள்ளது.
மழைக்காலத்தில் ரோட்டுக்கடைகளில் வாங்கி சுடச்சுட சோளம் சாப்பிடுவது சிலர் பழக்கமாகவே கொண்டுள்ளனர்.
சோளத்தை சிலர் வறுத்தும், சிலர் வேக வைத்து மசாலா சேர்த்தும் சாப்பிடுவார்கள்.
இப்படி மழைக்காலத்தில் சோளத்தை சாப்பிடுவது சுவை மட்டுமின்றி எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தையும் தருகின்றது. அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலத்தில் சோளம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. சோளம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கிறது. ஏனெனின் சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஊக்குவித்து சீராக்குகின்றது. சிலர் பருவமழை காலத்தில் உணவுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவார்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சினை அடிக்கடி ஏற்படலாம்.
2. சோளத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றல், புரதம், உயிர்ச்சத்துக்கள் அதிக அளவு இருக்கின்றன. அத்துடன் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கரோடெனாய்டுகள் உள்ளன. இது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
3. சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி கட்டுபடுத்தும் ஆற்றல் உள்ளது. டயட்டில் உள்ளவர்கள் அதிகமாக சோளத்தை உணவுடன் சேர்த்து கொள்வார்கள். பொதுவாக மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சோளம் சாப்பிடலாம். இதனால் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
4. மழைக்காலத்தில் தொற்றுக்கள் நோய்கள் எளிதாக பரவக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவானதாக இருக்க வேண்டும். உதாரணமாக சளி, இருமல், தும்மல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
5. சோளத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அத்துடன் சோளத்தில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்கிறது. இது சருமத்தை பொலிவாக்குவது மட்டுமல்லாது சுருக்கங்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |