சுவையில் கசப்பாக இருக்கும் பாகற்காயின் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா?
இந்த கோடைகாலத்தில் ஒவ்வொரு காய்கறியினதும் ஒவ்வொரு நன்மையறிந்து அதை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன் அறிந்து உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
அந்த வகையில் பாகற்காயை பலரும் சாப்பிடுவது குறைவு. இந்தக் கசப்பான காய்கறியை மிகச் சிலரே விரும்புகிறார்கள், ஆனால் பாகற்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, துத்தநாகம், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இந்த காய்கறி நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாகும்.
இது உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று நாம் கோடையில் பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மகத்தான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாகற்காய் நன்மைகள்
கோடையில், உடலில் நச்சுகள் அதிகரித்து, தோல் பிரச்சினைகள் , வயிற்று பிரச்சினைகள் மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால் அது கல்லீரலை சுத்தம் செய்து உடலை நச்சு நீக்கம் செய்வதற்கும் உதவுகிறது.
பாகற்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம்தான் . இது இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
எனவே இதை நீரிழிவு நோயாளர்கள் யோசிக்காமல் கோடையிலும் சரி எப்போதும் சாப்பிடலாம். காலநிலை மாற்றத்தில் நமக்கு நோய் தொற்றும் வேகமாக வரும்.
இதற்கு பாகற்காய் நல்ல காய்கறி. இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.
மேலும் நோய்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு வலிமையையும் தரும். கோடையில் பாகற்காய் சாப்பிடுவது வெப்பத் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
இது உடல் வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்கும். பாகற்காய்களில் உள்ள தண்ணீரின் அளவு நம் உடல் சூட்டை தணிக்க உதவும். இது உடலில் உள்ள நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |