மூல நோயின் கொடிய வலிக்கான நிவாரணம்- இந்த காய்கறிகள் அவசியம் சாப்பிடுங்க
“மூல நோய்” தற்போது நம்மிள் பலருக்கு உள்ளது நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மூல நோய்யானது ஆசனவாய் மற்றும் மலக்குடலின் கீழ் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மலம் கழிக்கும் பொழுது வலி, எரிதல், அரிப்பு மற்றும் அடிக்கடி இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான உணவுமுறையால் மூல நோயை குணமாக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மலச்சிக்கல் அதிகமாக இருப்பதால் மூல நோய் பிரச்சனை வருகிறது. மூல நோய் மலச்சிக்கலால் ஏற்படுகிறது என்பதால் உணவில் கூடிய கவனம் தேவைப்படுகிறது.
அந்த வகையில், மூல நோய் மற்றும் மலச்சிக்கலைப் போக்க எந்த காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மூல நோய்க்கு நிவாரணம் தரும் காய்கறிகள்
1. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் முதலில் இருப்பது பசலைக் கீரை தான். இது மலத்தை மென்மையாக்கி வலி இல்லாமல் இலகுவாக வெளியேற்றும். குடல் இயக்கம் சீராக்கப்பட்டு, மூல நோயினால் வரும் வலி குறையும். இது மன அழுத்தம் பிரச்சினையை குறைக்கும்.
2. பால் சுரக்காயில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மூல நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். மலம் கழிப்பதை எளிதாக்கும் சுரக்காய் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நிவாரணம் தருகிறது. அதே சமயம், உணவு உண்ட பின்னர் நடக்கும் செரிமான அமைப்பை நீரேற்றமாக வைத்துக் கொள்ளும்.
3. மற்ற காய்கறிகளை விட கேரட்டில் அதிக நார்ச்சத்து உள்ளது. மூல நோயால் அவஸ்தைப்படுபவர்கள் கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது மலத்தை மென்மையாக்குகிறது. வழக்கமான குடல் இயக்கம் எளிதாக்கப்பட்டு வலியால் வரும் பதற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது.
4. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் டிண்டா மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், செரிமானத்தையும் இலகுவாக்கும். மூல நோய் அறிகுறிகள் இருப்பின், உணவில் டிண்டாவை சேர்த்துக் கொள்ளலாம்.
5. ப்ரோக்கோலியில் நார்ச்சத்து உள்ளதால் செரிமான அமைப்பு சீராக இருக்கும். கூனைப்பூ காய்கறிகளில் இன்யூலின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது குடலில் இயக்கத்திற்கு உதவும் பாக்டீரியாக்களை உருவாக்கும் வேலையை செய்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |