Health Benefits: புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை தீர்வு கொடுக்கும் மஞ்சள் பால்...
குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும்,உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பொருளாகவும் பார்க்கப்படுகின்றது.
மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றது. இதன் காரணமாக மஞ்சள் பால் சளி மற்றும் இருமலுக்கு எதிரான வீட்டு மருந்தாக தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில், நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பண்புகளின் காரணமாக தற்காலதத்தில் மஞ்சள் பால் உளகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மஞ்சளில் இயற்கையாகவே காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிரப்பு பண்புகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினசரி மஞ்சள் பால் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்
மஞ்சள் கலந்த பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது, வலுவான எலும்புகளுக்கு இவை அவசியமாகும்.
எலும்புகளை வலுப்படுத்துவதோடு, எலும்புச் சிதைவை தடுப்பதிலும் மஞ்சள் சேர்த்த பால் ஆற்றலுடன் செயற்படுகின்றது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துதற்கும் இது பெரிதும் துணைப்புரிகின்றது.
சளி, இருமல், காய்ச்சல், காயங்கள், மூட்டு வலி மற்றும் பல சிக்கல்களுக்கு மஞ்சள் கலந்த பால் எடுத்து கொள்வது சிறந்த தீர்வாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த என பல வகையிலும் மஞ்சள் பால் உதவுகிறது.
மஞ்சளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது.எனவே மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோயை தடுக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் மெட்டாஸ்டேடிக் நோய் பரவுவதை தடுக்கவும் மஞ்சள் கலந்த பால் உதவுகின்றது.
புற்றுநோக்கான கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிகிச்சையின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் மஞ்சள் பால் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.
இது முதுகெலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவும். கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளிட்ட மூட்டு மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் பால் சிறந்தவொன்றாகும்.
குர்குமின், வீக்கத்தைக் குறைத்தல், கொழுப்பின் அளவைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை ஆதரிப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட இருதய ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மஞ்சள் பால் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் மற்றும் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க துணைப்புரியும்.
மஞ்சள் பாலின் சூடான மற்றும் இனிமையான விளைவுகள், வீக்கத்தைக் குறைப்பதற்கும், தளர்வை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது, மேலும் மன அழுத்தத்தைத் குறைப்பதிலும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்றது.
மஞ்சள் பாலின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை பெற உதவும்.
இது கறைகளைக் குறைக்கவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற பல்வேறு தோல் பிரச்சினைகளைப் போக்கவும் பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
