தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிக்க மறக்காதீங்க... பல நன்மைகளை மிஸ் பண்ணிடுவீங்க!
நாம் ஒவ்வொரு நாளையும் ஆரோக்கியமான நாளாக மாற்ற காலை உணவு மிக முக்கியமானதாகும். அதிலும் நாம் காலையில் என்னென்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது இன்னும் முக்கியமானதொன்று.
அந்தவகையில் காலையில் ஆரோக்கிய பானங்களை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி தினமும் காலையில் லெமன்வாட்டர் குடித்தால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
லெமன் வாட்டரின் நன்மைகள்
காலையில் வேளையில் தண்ணீர் குடிப்பது நல்லது தான். அந்த தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் ஹைட்ரேஷன் லெவலை பராமரிக்க உதவும்.
எழுமிச்சையில் நிறைய சத்துக்கள் இருக்கின்றது. மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும் அதிலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த மூலமாக இருப்பது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
இந்த லெமன் வாட்டரானது செரிமான ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கிறது. மேலும், வயிற்றில் ஆசிட் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரஸ் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு சுவாசத்தை புத்துணர்ச்சியடைய செய்து துர்நாற்றத்தைக் குறைக்கும்.
லெமன் வாட்டரானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் குடலும் ஆரோக்கியம் பெறும் மேலும், இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கால்சியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய இந்த லெமன் வாட்டரை பருகும் போது ரத்த அழுத்தம் குறைகிறது.
லெமன் வாட்டரானது சரும முகப்பருக்களிடம் இருந்து பாதுகாக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |