பக்கவாதத்தை ஏற்படுத்தும் Dark chocolate- stress-ல் உள்ளவர்கள் சாப்பிடலாமா?
பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் உணவுடன் சில சாக்லேட்ஸ்களை சேர்த்து கொள்வார்கள்.
இது நம்முடைய ரத்த அழுத்தத்தைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் லெவலை உயர்த்தும் வேலையை செய்கிறது.
நாம் எதிர்பார்ப்பதை விட சாக்லேட்டில் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் Dark chocolate சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதாக ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
Dark chocolate ஏன் சாப்பிடுகிறார்கள்?
1. கடந்த 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி கிட்டத்தட்ட 44% இந்தியர்கள்,சாக்லேட்டின் நன்மை அறிந்து ஹை-குவாலிட்டி சாக்லேட்டுக்களை வாங்கி உண்கிறார்கள். அதிலும் குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள Dark chocolate எடுத்து கொள்கிறார்கள். இவற்றில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக கோகோ (cocoa) இருக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு நல்ல எனவும் கூறப்படுகிறது.
2. சாக்லேட்டுக்களை (mood lifter) எனவும் அழைப்பார்கள். இதற்கான முக்கிய காரணம் சாக்லேட் நமது மனநிலையை உயர்த்தி நாம் நன்றாக இருப்பது போன்று உணரச் செய்யும். சாக்லேட் சாப்பிடும் போது, நம் உடல் அதிக செரோடோனின் உற்பத்தி செய்ய tryptophan-ஐ பயன்படுத்தி கொள்கிறது. இதனால் ஒரு வகையான அமைதி, திருப்பதி போன்று உணருகிறோம்.
3. டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
4.டார்க் சாக்லேட்டுகள் நீரிழிவு நோயாளிகள் அவர்களின் டயட்டில் Dark chocolate சேர்த்து கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிறிய பீஸ் டார்க் சாக்லெட் சாப்பிடலாம்.
5. அளவு அதிகமாக எடுத்து கொள்ளும் போது செரிமான பிரச்சினைகள், இரைப்பை குடல் பிரச்சனைகள், இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு சாக்லேட்டுக்கள் ஒரு காரணமாகவும் இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |