முழு தேங்காய் பூவை ஒருவர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க...!
இளநீர், தேங்காய், தேங்காய் பால் போன்றவற்றை நாம் அடிக்கடி பருக முடிந்தாலும், தேங்காய்ப்பூ என்பது அரிதாக கிடைக்கும் ஒன்று தான்.
ஏனென்றால் தேங்காய் பூ கிடைக்க, முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.
பின்னர் 20 நாட்களுக்கு பின்னரே, கீழே இரண்டாவதாக குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ளது போல தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்த பக்குவத்தில் தேங்காயை உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும்.
இதுபோல் நன்கு முற்றிய தேங்காய் கன்றில் இருக்கும் வளர்ந்த கரு தான் தேங்காய்ப்பூ.
இது நிறைய நன்மைகளை கொண்டது. தாயின் தாய்ப்பாலில் மட்டுமே உள்ள சில சத்துக்கள் இளநீரில் தான் உள்ளது. அப்படிப்பட்ட இளநீர் கருவாக வளர்ச்சி பெருகையில் அதிக அதிகப்படியான சத்துப்பொருட்கள் நிறைத்து இருக்கிறது.
தேங்காய் பூவில் நீர்சத்து அதிகம் உள்ளதோடு மட்டுமல்லாமல், அது இன்சுலின் சுரப்பியின் செயல்பாட்டை தூண்டுவதால் நீரிழிவு நோயும் குணமடையும் என்கிறார்கள்.
குறிப்பு
இது அளவாக , அதாவது ஒரு தனிநபர் அதிகபட்சம் ஒரு முழு தேங்காய் பூவை மட்டுமே சாப்பிடுவது நல்லது. அதற்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.
அளவுக்கு அதிகமாக உண்டால் அது பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வல்லது.