Buttermilk : கோடையில் கட்டாயம் மோர் குடிங்க! அதிசயத்தை நிச்சயம் பார்ப்பீங்க
கோடையில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே உடல்நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுத்தலாம்.
இத்தகைய சூழ்நிலையில், மோர் உங்களுக்கு சிறந்த தீர்வு ஆகும். ஏனெனில் இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன. எனவே, தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மோர் குடிப்பதால் நன்மை
கோடை காலத்தில் மோர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் நோய்களை எதிர்த்து போராடுகின்றது.
எலும்புகளையும் வலுவாக வைத்திருக்க உதவுகின்றது. கோடை காலத்தில் உடம்பை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையை குறைப்பதற்கும் சிறந்த தீர்வாக இருக்கின்றது.
அதுபோல், மோரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதுடன், கோடையில் ஏற்படும் செரிமான பிரச்சினையை சரிசெய்யவும், வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றது.
கோடையில் ஆற்றல் விரைவாக மந்தமாகிவிடுவதால், அத்தகைய நேரத்தில் மோர் குடிப்பது நல்ல நிவாரணம் கிடைப்பதுடன், ஆற்றல் அளவுகளை உடனடியாக அதிகரிக்கவும், உடம்பை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |