கருப்பு அரிசி சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
அரிசி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அரிசிதான் நமது பிரதான உணவாக இரக்கிறது.
ஆனால் வெள்ளை அரிசியை சாப்பிடுவதில் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தாலும் அதை விரும்பி மக்கள் உண்டு வருகின்றனர்.
ஆனால் அரிசி வகையில் கருப்பு அரிசியும் ஒரு வகை உள்ளது உங்களுக்கு தெரியுமா? இந்த கருப்பு அரிசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த கருப்பு அரிசி உண்பதால் உடலுக்கு என்னென்ன நன்மை கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருப்பு அரிசி
இந்த கருப்பு அரிசியில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் புரதம் அதிக அளவு உள்ளது. இதன் அடர் ஊதா நிறத்திற்கு காரணமான ஆக்சிஜனேற்றங்கள் நம் உடலுக்கு நன்மை அளிக்கிறது.
இதில் இரும்புச்சத்துக்கள் உடலை சீரான முறையில் இயக்கி உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும். இதனால் நாம் சோர்வின்றி வேலை செய்யலாம்.
கருப்பு அரிசியில் உள்ள புரதச்சத்துக்கள் உடல் திசுக்களை பராமரிக்கவும் சேதத்தை குணப்படுத்தவும் உதவும். இது அதிகளவு அல்சைமர், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
இந்த அரிசி உடலில் ல் உருவாக்கம், தசைகளை உருவாக்குதல் மற்றும் ஹார்மோன் உற்பத்தி போன்ற பல செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
ரத்தத்ில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதோடு மாரடைப்பு பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் இருக்காது.
கருப்பு அரிசியில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் கரோட்டின் சத்துக்கள் எமது கண்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
இந்த ஊட்டச்சத்துக்கள் குறைபாடு தான் குருட்டுத் தன்மைக்கான பொதுவான காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து நம் கண்களை பாதுகாக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |