Soup Recipe: மூட்டுவலிக்கு முடிவு கட்டும் ஒரு சூப்! இப்பவே செய்து குடிங்க
தற்போது காலநிலை மிகவும் குளனிராக மாறி உள்ளது இதில் பல லுக்கும் ஏதாவது சூடாக சுவையாக குடிக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இது உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
நமது எலும்பு வலுவடைந்து பல நன்மைகள் உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் ஆட்டுக்கால் சூப் குடிப்பது நன்மை தரும்.
ஆனால் இதை எப்போதும் செய்வது போல செய்யாமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குத் தகுந்ததை போல செய்வது அவசியம். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால் - 250 கிராம்
- வெங்காயம் - 1/2 கப்
- தக்காளி - 1
- மிளகு - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- இஞ்சி - 2 துண்டு
- பூண்டு - 3
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் மல்லி விதை, மிளகு, சீரகம் இவை மூன்றையும் எண்ணெய் இல்லாமல் தனி தனியாக வறுத்து எடுக்க வேண்டும். பின் அவற்றை ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு மையாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது எடுத்து வைத்த ஆட்டுக்காலை தீயில் சுட்டுக் கொள்ள வேண்டும். அதன்பன்னர் ஒரு குக்கரில் ஆட்டுக்கால், தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து 15 விசில் விட்டு வேக வைக்கவும்.
அதன்பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக வத்க்கவும். அதன் பின் குக்கரில் வேகவைத்த ஆட்டுக்காலை தண்ணீருடன் சேர்த்து கொள்ளுங்கள்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் மசாலாவையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்க வேண்டும்.
இதன்படி செய்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார். இதை மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் குடித்துவர உடல் ஆரோக்கியதாக இருக்கும். மூட்டு வலியும் நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |