வெற்றிக்காக பிக் பாஸில் சௌந்தர்யாவின் சூழ்ச்சி: அம்பலப்படுத்திய முன்னாள் போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவை ஜெயிக்க வைக்க அவரது காதலன் விஷ்ணு செய்யும் மோசடியை நடிகை சனம் ஷெட்டி அம்பலப்படுத்தி இருக்கிறார்.
பிக் பாஸ் சௌந்தர்யா
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் ஆரம்பமானது. தற்போது இறுதிக்கட்த்தை நெருங்கி இருக்கும் இந் நிிகழ்ச்சியில் பைனலுக்கு முத்துக்குமரன், செளந்தர்யா, ரயான், பவித்ரா, விஷால் ஆகிய ஐந்து பேர் மட்டுமே சென்றிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த நிலையில் கடந்த சீசனில் இருந்து போட்டியாளர்கள் வெளியே PR வேலைகளை செய்ய ஆட்களை வைத்து ஓட்டு வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக கடந்த சீசனில் டைட்டில் வென்ற அர்ச்சனா, PR வேலைகளை செய்து தான் வெற்றி மகுடம் சூட்டினார் என தெரிய குற்றம் சாட்டப்படுகிறது.
அதே போல இந்த சீசனில் சௌந்தர்யா எதுவுமே செய்யாமல் வெறும் PR டீமின் உதவியும் பைனல் வரை வந்துவிட்டதாக சுனிதா நேரடியாகவே கூறினார்.
இதை செளந்தர்யா மறுத்தாலும் தனக்காக வேலை செய்ய PR டீம் இருப்பதையும் ஒத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் செளந்தர்யாவின் PR டீம் செய்யும் மோசடி வேலைகளை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளார்.
பைனலுக்கு இன்னும் குறுகிய நாட்கள் இருக்கிறது. இந்த நிலையில் சௌந்தர்யாவின் காதலனான விஷ்ணு விஜய் அவரை வெற்றி பெற செய்வதற்காக முயன்று வருகிறார்.
இதற்றாக செளந்தர்யாவுக்கு வாக்களிக்க கொடுக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் நம்பரை செளந்தர்யாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இணைத்துள்ளனர்.
யாரேனும் அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு சென்றால் அதில் Call என்கிற ஆப்ஷன் இருக்கும். அது செளந்தர்யாவின் நம்பராக இருக்கும் என எண்ணி கால் செய்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு அந்த மிஸ்டு கால் நம்பரை அதில் இணைத்து வைத்திருக்கிறார்கள்.
அதேபோல் செளந்தர்யாவின் காதலன் விஷ்ணு விஜய், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எனக்கு உடனே கால் பண்ணுங்க அவசரம் எனக்கூறி ஒரு போன் நம்பரை பதிவிட்டுள்ளார். அது செளந்தர்யாவுக்கு வாக்களிக்கும் இலக்கமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |