தலை இல்லாமல் காவலுக்கு இருந்த காவலாளி... இணையத்தை அலற வைத்த புகைப்படம்
கடை ஒன்றில் காவலாளியாக இருந்த மனிதர் தலையில்லாமல் காணப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இணையத்தில பல நம்பமுடியாத சம்பவங்களை அவதானித்து வருகின்றோம். வினோதங்கள் அடங்கிய இந்த இணையத்தில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழப்பத்தில் ஆழ்த்திய புகைப்படம் தற்போது பெரும் வைரலாகி வரும் நிலையில், பார்வையாளர்கள் பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
காவலரின் தலை எங்கே?
ஆம் குறித்த புகைப்படத்தில் தலை இல்லாமல் காவலாளி ஒருவர் கடை வாசலில் அமர்ந்து காவல் காக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
காவலாளி அணியும் சீருடையை அணிந்திருக்கும் இவர் தலை இல்லாமல் இருப்பது எப்படி என்ற கேள்வி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த புகைப்படம் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் rajsinghmedia_123 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான பார்வையாளர்கள் மட்டுமின்றி கருத்துக்களும் குவிந்து வருகின்றது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த நபர், ‘இது குழப்பத்தை ஏற்படுத்தும் படம்.’ என எழுதியுள்ளார். ‘இது ஏதோ மேஜிக் போல தெரிகிறது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார்.
மற்றொருவர் போட்டோவை தொழில்நுட்பம் கொண்டு இவ்வாறு செய்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |