சர்ச்சையை கிளப்பிய ஹரி- மேகன் பேட்டி! அவர்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது தெரியுமா?
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அரச குடும்பத்தினர் மீது மேகன் வைத்த குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, மேகனின் தந்தை கூட அரச குடும்பத்துக்கு ஆதரவாக பேட்டியளித்திருந்தார்.
குறிப்பாக மகாராணி மீது குற்றம் சாட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ள மக்கள், அவர்களது பட்டங்களை பறிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே ஆர்ச்சி என மகன் உள்ள நிலையில், தற்போது மேகன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என்றும், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டாம் என இருவரும் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.