இரவில் பல் துலக்காமல் தூங்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்!
பொதுவாக நாம் சுமார் 2 அல்லது 3 வயதிலிருந்து நாம் கடைபிடிக்கும் பழக்கங்களில் இரவில் பல் துலக்கும் பழக்கமும் ஒன்று.
அந்த வகையில் புகைப்பிடிப்பதால் எப்படி பின்விளைவுகள் உள்ளதோ? அவ்வாறே நாம் பல் துலக்காமல் துங்கினாலும் வரும்.
ஒரு நாள் நாளை பல் துலக்கி கொள்வோம் என தூங்கினால் இனி வரும் நாட்களிலும் பல் துலக்காமல் தூங்குவதற்கு தான் மனநிலை வரும்.
இதன்படி, பல் துலக்கினால் என்ன நடக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
பல் துலக்காவிட்டால் என்ன நடக்கும்?
1. பிளேக்
இரவில் பல் துலக்காமல் தூங்கினால் பிளேக் உருவாக இதுவே காரணியாகி விடும். இந்த பிரச்சினையை சாதாரண டூத்பிரஷ் வைத்து சுத்தம் செய்ய முடியாது மாறாக பல் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்.
2. பற்களின் ஆரோக்கியம்
பிளாக் ஏற்படுவதால் பற்கள் மற்றும் ஈடுகளில் தொற்றுகள் பரவும். இதனால் பற்கள் வலுவிழந்து போகும்
3. துர்நாற்றம்
இரவு நேரங்களில் நாம் சாப்பிடும் சாப்பாடுகள் எல்லாம் பற்களில் தான் தங்கியிருக்கும். இது காலையில் எழுந்தவுடன் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
இதற்கு என்ன செய்யலாம்?
இரவு நேரங்களில் எந்த வேலை இருந்தாலும் அதனை செய்து விட்டு இரண்டு நிமிடங்கள் சரி பல் துலைக்கி விட்டு தூங்க வேண்டும்.