காதல் மனைவிற்கு பிறந்தநாள்! ஹரிஷ் கல்யாண் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
பிரபல நடிகர் ஹரிஸ் கல்யாண் தன்னுடை ஆசை மனைவிக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்துள்ளார்.
சினிமா
கோலிவுட் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ஹரிஷ் கல்யாண்.
இவர் தமிழ் சினிமாவிற்குள் “ சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து சட்டப்படி குற்றம், அரிது அரிது, பொறியாளன், சந்த மாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு திரைப்படங்கள் நடித்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் “ நர்மதா உதயகுமார்” என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மனைவிக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
இவரின் திருமண நிகழ்வுகள் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது. அத்துடன் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.
சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் கல்யாண் அவரின் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் மனைவி நர்மதா பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கல்யாண் மனைவிற்கு பிறந்த நாள் பரிசாக அவரின் சிறு வயது புகைப்படங்களை ஓவியமாக வரைந்து கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், மனைவிற்கும் கல்யாணிற்கும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.