ஹர்திக் பாண்டியா காலை முதல் மாலை வரையிலான உணவு பட்டியல்- ஃபிட்னஸ் இரகசியம்
எப்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
அதிலும் குறிப்பாக, விளையாட்டு வீரர்கள் சராசரி நபர்களை காட்டிலும் அதிகம் ஆரோக்கியமான உணவுகளை உட்க் கொள்வார்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா ஒரு ஆல்ரவுண்டர்.
இவர் கிரிக்கெட் விளையாட்டில் பேட்டிங் , பவுலிங் இரண்டிலும் சிறந்தவர். ஹார்திக் தன்னை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள காலை முதல் மாலை வரை ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வைத்திருக்கிறார்.
அப்படியாயின், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் காலை முதல் மாலை வரையிலான உணவு பழக்கம் எப்படி இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
காலை
காலையில் எழுந்தவுடன் ஹார்திக் பாண்ட்யா, 500 மில்லி தண்ணீர் குடித்து விட்டு உயற்பயிற்சி செய்வாராம். இதனை பல பிரபலங்கள் பின்பற்றி வருகிறார்கள்.
ஸ்மூத்தி
ஹார்திக் பாண்டியாவின் காலை உணவில் புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும் என்பதால் சூரியகாந்தி விதைகள், பாதாம், ஓட்ஸ், வெண்ணெய் மற்றும் பாதாம் பால் ஆகிய பொருட்கள் கொண்ட ஸ்மூதி செய்து குடிக்கிறார். அதனுடன் வாழைப்பழங்கள் எடுத்து கொள்கிறார். இதிலிருந்து அவருக்கு 650 கலோரிகளும் 30 கிராம் புரதமும் கிடைக்கிறது.
மதிய உணவு
பொதுவாக விளையாட்டு வீரர்கள் கலோரிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என ஹர்திக் பாண்ட்யா பேசியிருக்கிறார். அவருக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும் என்பதால் தாலியில் ஒரு கிண்ணம், கீரை, ஒரு கிண்ணம் பருப்பு, சீரக சாதம் ஆகிய உணவுகள் சாப்பிடுகிறார். இதில் 55 கலோரிகளும் 24 கிராம் புரதமும் உள்ளது.
மாலை உணவு
பயிற்சிக்கு பின்னர் ஹார்திக், மாலை சிற்றுண்டியாக ஓட்ஸ் மற்றும் நட்ஸ் கலந்த உணவை சாப்பிடுகிறார். அதில் அவருக்கு 600 கலோரிகளையும் 28 கிராம் புரதத்தையும் கிடைக்கிறது. அதனை தவிர வேறு சத்துக்களும் உள்ளன.
இரவு உணவு
இரவு உணவிற்கு டோஃபுவை கீரைகள் மற்றும் பழுப்பு அரிசியுடன் சேர்த்து எடுத்துக்கொள்கிறார். இது அவருக்கு 106 கிராம் புரதம் கொடுக்கிறது. மொத்தமாக நாள் முழுவதும் 2330 கலோரிகளை எடுத்து கொள்கிறார். இரவில் தூங்குவதற்கு முன் ஹார்திக் அவருடைய குடும்பத்தினர் நேரம் செலவு செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |