ரூ.25 கோடிக்கு விற்கப்படும் அதிசய பாம்பு- காரணம் என்ன?
பாம்புகளில் ஒரு இனம் ரூ.25 கோடிக்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வனவிலங்கு நிபுணர் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரெட் சாண்ட் போவா பாம்புகள்
அடர்ந்த காடுகளில் உள்ள விலங்குகள் பற்றிய கட்டுக்கதைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தூண்டும் வகையில் வதந்திகளும் உள்ளதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிலும் சில நாடுகளில் இருக்கும் அரியவகை உயிரினங்களை கடத்திச் சென்று கள்ளசந்தையில் விற்பனை செய்யும் செய்கிறார்கள்.
அந்த வகையில், பீகாரில் உள்ள வால்மீகி புலிகள் சரணாலயம் மற்றும் பல மாநிலங்களில் விஷமற்ற பாம்பான ரெட் சாண்ட் போவாவும் ஒன்று. "இரண்டு தலை பாம்பு" என்று பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இதனால் பாம்பை சட்டவிரோதமாக கடத்தும் தொழில் அதிகமாகியுள்ளது.
இரண்டு தலை பாம்பு என்று பிரபலமாக அறியப்படும் இந்த ரெட் சாண்ட் போவா பாம்பிற்கு இரண்டு தலைகள் அல்லது வாய்கள் இருக்காது. ஆனால் பாம்பின் வால் பகுதி அதன் தலையை போன்று இருக்கும்.
25 லட்சத்துக்கு விற்பனை
இது தொடர்பில் நிபுணர் ஒருவர் கூறுகையில், "டபுள் எஞ்சின் பாம்புகள் முற்றிலும் பாதிப்பில்லாதவை..” என விளக்கமாக கூறியுள்ளார். பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் அடக்கமானவை மற்றும் தொந்தரவு செய்யப்படாவிட்டால் அரிதாகவே மனிதர்கள் பார்வைக்கு வரும்.
ஆதாரமற்ற நம்பிக்கைகளால் தூண்டப்பட்டு, ரெட் சாண்ட் போவாக்களுக்கான தேவை கள்ளச்சந்தையில் கடந்த சில மாதங்களாக அதிகமாகியுள்ளது.
கடத்தல்காரர்கள், இந்த பாம்புகளில் அதிகமாக சக்திகள் இருப்பதாக கூறி ரூ.2 கோடி முதல் ரூ.25 கோடி வரையிலான பெறுமதிக்கு விற்பனை செய்கிறார்கள்.
என்ன நடக்கும்?
ரெட் சாண்ட் போவாக்களை வாங்கி வைத்திருந்தால் செல்வத்தையும், வெற்றியை தரும். இன்னும் பலர், இந்த பாம்பு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பார்க்கிறார்கள்.
வனவிலங்கு நிபுணர்கள் இந்தக் கூற்றுகளை மறுத்து, இந்த பாம்புக்கு உண்மையான வணிக அல்லது மருத்துவ மதிப்பு இல்லை என கூறியுள்ளார்.
மேலும், ரெட் சாண்ட் போவாக்களின் சட்டவிரோத வர்த்தகம், மூடநம்பிக்கை காரணமாக அதிகமான விலைக்கு விற்பனையாகிறது. பல பகுதிகளில், தொழில் வளர இந்த பாம்புகள் பலியிடுகிறார்கள்.
அவை அமானுஷ்ய நடைமுறைகள், சூனியம் மற்றும் தாந்த்ரீக சடங்குகளுடன் இணைக்கபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
