யோயோ டெஸ்டில் சொதப்பிய இளம் வீரர் - ஐபிஎல் விளையாடுவரா?
ஐபிஎல் போட்டியானது வருகிற மார்ச் 26-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் 10 நாட்கள் தேசிய அகாடமியில் பயிற்சி பெறுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.
சொதப்பிய இளம் வீரர்
இதன்படி 25 கிரிக்கெட் வீரர்கள் அகாடமியில் பயிற்சியில் கலந்துகொண்டனர். இதில் வீரர்களின் உடல்நிலை சரிபார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் இளம் வீரர் இதில் தோல்வியடைந்துள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை டெல்லி கேப்பிடல்ஸ் பேட்ஸ்மேன் ஆனா பிரித்வி ஷா தான். யோயோ டெஸ்டில் பங்கேற்று தோல்வியடைந்துள்ளார்.

ஆனால், ஐபிஎல்லில் விளையாட அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சில காலமாக மோசமான ஃபார்மை கொண்டிருந்த அவர், இந்திய அணியில் இனி இடம் பிடிப்பது கடினம் தான்.
பிருத்வி ஷா யோ-யோ டெஸ்டில் 15 மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆனால், அந்த டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 16.5 மதிப்பெண்களை ஒரு வீரர் பெற வேண்டும்.
மாஸ் காட்டிய ஹர்திக் பாண்டியா
இவரைத்தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் யோ-யோ டெஸ்டில் பங்கேற்றார். அவர் 17 புள்ளிகள் பெற்று இந்த சோதனையில் வெற்றி பெற்றுள்ளார்.

ஹர்திக் பந்துவீச்சு பயிற்சி அவருக்கு கட்டாயமாக இருக்கவில்லை என்றாலும், 135 கிலோ மீட்டர் வேகத்தில் சில ஓவர்களையும் ஹர்திக் பாண்டியா வீசியுள்ளார்.
எனவே இனி இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றால் இளம் வீரர்களுக்கு உடல் தகுதியும் போட்டியின் சராசரியும் பார்த்து தான் இடம்பிடிப்பார்கள் எனக்கூறப்படுகிறது.