தோழியின் கணவரை திருமணம் செய்தது ஏன்? ஹன்சிகா என்ன சொல்லியிருக்கிறார்?
விவாகரத்தான நபரை திருமணம் செய்தற்கான காரணத்தை படம் போட்டுக்காட்டிய ஹன்சிகாவின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் சின்ன குஷ்புவாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வாணி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிளை' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவரின் முதல் படத்திலே குட்டி குஷ்புவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணியில் நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுடன் இணைந்து சில வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவரின் குழந்தைத்தனமான நடிப்பை வைத்து அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராக தெரிவுச் செய்யப்பட்டு கொடிக்கட்டி பறந்தார்.
இந்த காலக்கட்டங்களில் தன்னுடைய உடல் எடையை குறைத்து தற்போது காணாமலே போய்விட்டார் என்றே கூற வேண்டும்.
நண்பியின் கணவருடன் காதல் குறித்து விளக்கம்
இந்த நிலையில் ஹன்சிகா சோஹேல் என்ற தொழிலதிபரை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டார்.
இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான கத்தூரியாவின் முன்னாள் கணவர் என்பதால் இவரின் இந்த முடிவு குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தன்னுடைய திருமணத்தை ஒரு சோட் திரைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் கணவரின் முன்னாள் வாழ்க்கை குறித்து எனக்கு கவலை இல்லையென இவர் கூறியுள்ளார்.
மேலும் இவரின் இந்த கருத்து நண்பியின் கணவரையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் என வதந்திகளை கிளப்பிய விமர்சகர்களுக்கு இது ஒரு பதிலடியாக போய் சேர்ந்துள்ளது.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகிய வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் திருமணத்திற்கு விளக்கம் கொடுக்கவா? இந்த வீடியோ காட்சி என சந்தேகமாக கேட்டுள்ளார்கள்.