நெருங்கிய தோழியின் கணவரை கரம்பிடிக்கும் ஹன்சிகா!
பிரபல நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் குறித்து சில சர்ச்சைக்குரிய உண்மைகள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சின்ன குஷ்புவாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் 'மாப்பிளை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதனை தொடர்ந்து தமிழ் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுடன் இணைந்து சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தன்னுடைய கணவரின் திருமண நிகழ்வில் ஹன்சிகா
இந்நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோஹேலுக்கு ஏற்கனவே கத்தூரியா என்ற பெண்ணுடன் திருமணம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சில காலங்களிலே விவாகரத்துப் பெற்றுள்ளனர்.
சோஹேல் திருமணம் செய்த பெண்ணும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள் எனவும் இவர்களின் திருமணத்தில் ஹன்சிகா கலந்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஹன்சிகாவின் திருமணத்தில் சர்ச்சை
மேலும் நடிகை ஹன்சிகாவும் சோஹேலும் நெருங்கிய நண்பராக பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்திருந்தனர்.
இவர்கள் சமீபத்தில் மோதிரம் மாற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பித்தக்கது.