வாரத்திற்கு 2 தடவை போடுங்க... 15 நாட்களில் காடு போன்று முடி வளரும்
பொதுவாக தலைமுடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
என்னதான் தலைமுடியை பராமரித்தாலும், தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் மாத்திரம் சிலருக்கு குறைவதில்லை. தலைமுடியை சரியாக பராமரித்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைபிடிக்காத போது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது.
அதே சமயம், தலைமுடி பராமரிப்பு பற்றிய அறியாமையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட மருத்துவர்கள் பரிந்துரைகளை வழங்கி வருகிறார்கள்.
அப்படியாயின், தலைமுடி வளர்ச்சியை கட்டுபடுத்தும் என நாம் பயன்படுத்தும் பொருட்கள் எந்தளவு நமக்கு உதவியாக உள்ளது என்பதற்கு விதவிதமான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் உள்ளன.
அந்த வகையில், தலைமுடி உதிர்வு பிரச்சினையுள்ளவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய செம்பருத்தி பூ எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- செம்பருத்திப் பூ
- வெந்தயம்
எண்ணெய் செய்வது எப்படி?
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதன் பின்னர் வெந்தயம், ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூ அனைத்தையும் ஒன்றாக போட்டு கொதிக்க வைக்கவும்.
கொதித்த பின்னர், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு எண்ணெய்யின் நிறம் மாறும் வரை காத்திருக்கவும்.
வாசனை வரும் பொழுது அடுப்பை அணைத்து விட்டு, எண்ணெய்யை ஆற வைத்து ஒரு போத்தலில் ஊற்றவும்.
இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு தடவைகள் தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த எண்ணெய் இருக்கும் சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |