உடல் எடையை குறைக்க இந்த விதைகள் மட்டும் போதும்! ஆனால்...
தமிழில் சாலியா அல்லது ஆளி விதைகள் என்றழைக்கப்படும் ஹலிம் விதைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
இதை எப்படி சாப்பிட வேண்டும்? ஒருநாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும்? தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டு என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சத்துக்கள் என்னென்ன?
சிறிய சிவப்பு நிறம் கொண்ட இந்த விதைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளதால், உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.
ஒமேகா 3 அதிகம்
இரண்டு தேக்கரண்டி ஆளி விதையில் 2.8 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, கொழுப்பு அமிலம் குறைந்துவிட்டால் முடக்குவாதம், இதயநோய் மற்றும் மனநிலை கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே இதனை உட்கொண்டு வந்தால் மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
உடல் எடையை குறைக்க
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சரியான அளவில் எடுத்துக்கொண்டால் அதிகம் பசி எடுக்காது, அதனால் உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளலாம்.
மேலும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுத்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.
இதிலிருக்கும் லிக்னன்ஸ்’ (Lignans) என்ற ஆன்டி ஆக்சிடன்ட், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து கொழுப்பை எரிக்கிறது.
நுரையீரல் செயல்திறனை மேம்படுத்தும்
இந்த விதைகளில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளன, இருமல், தொண்டை புண் போன்றவற்றுக்கும் நல்ல சிகிச்சையளிப்பதாக உள்ளது.
எனவே குளிர், மழைக்காலம் போன்ற பருவகால மாற்றங்களின்போது இதனை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
குறிப்பு
என்னதான் பல நன்மைகளை தந்தாலும், 1 தேக்கரண்டி விதைகளுக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, வாரத்தில் 3 முதல் 4 முறை இதனை வழக்கமாக நாம் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இந்த விதைகள் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதால் விதைகளை பொடி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம், இதன் மூலம் இதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக நம்மால் பெற முடியும்.