மழைக்காலங்களில் தலைமுடி ரொம்ப கொட்டுதா? அப்போ ஷாம்போவுடன் இந்த பேக்கை யூஸ் பண்ணுங்க!
பொதுவாக பருவமழையின் போது முடி உதிர்தல் அல்லது வறண்ட முடி தொடர்பான பிரச்சினைகள் பெண்களுக்கு வரும். இது அதிகமான ஈரப்பதம் காரணமாக ஏற்படுகின்றது.
மேலும் மழைக்காலத்தில் ஈரப்பதமான சூழ்நிலைகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் இனப்பெருக்கம் செய்யும் இது தலையில் இருக்கும் பொடுகு, முடி பிரச்சினைகளை உருவாக்கும்.
இப்படியான பிரச்சினைகளை நாம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு நிரந்தரமாக சரிச் செய்யலாம்.
முதலில் நாம் தலைமுடி பிரச்சினை ஏன் இப்படி ஏற்படுகின்றது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் மழைக்காலங்களில் ஏற்படும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளை எப்படி சரிச் செய்து கொள்ளலாம் என்பதனை தெரிந்து கொள்வோம்.
1. அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய்
தேவையான பொருட்கள்
- அவகேடா பழம் - 1
- ஆலிவ் எண்ணெய் - ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் பேக்கிற்கு தேவையான அவகேடாவை எடுத்து தோல் நீக்கி உள்ளிருக்கும் பழத்தை எடுத்து ஒரு பவுலில் எடுத்து போடவும்.
பின்னர் பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.
பேக் பதத்திற்கு வந்த பின்னர் அதில் ஆலிவ் எண்ணெயை கலந்து கொள்ளவும்.
நன்றாக கலவை கலந்த பின்னர் தலைக்கு அப்ளை செய்து கொள்ளவும்.
தலைக்கு அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை தலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்ய வேண்டும்.