இனி கவலையே வேண்டாம்.. மழைக்காலங்களில் உங்கள் காரை பராமரிக்க சூப்பரான 5 எளிய வழிமுறைகள்
மழைக்காலம் தொடங்கி விட்டாலே பல வாகனங்கள் பழுதாக ஆரம்பித்து விடும். இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து நமது பிரியமான வாகனங்களை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்..
பாதுகாப்பு கவர் (Car Body Cover)
மழையில் வாகனத்தை நனைய விடும்போது நமக்கே தெரியாமல் சில பாகங்கள் மழை நீருக்கு இரையாகும். ஆகையால், மழையில் வாகனத்தை பாதுகாக்க முறையில் நிறுத்துவது மிக சிறந்தது. பார்க்கிங் அல்லது படத்தில் இருப்பதைப் போல பாதுகாப்பான போர்வைகளைக் கொண்டு காரை மூடி வைப்பது மிகவும் நல்லது.
அதிக வெயில் காலத்திலும் வாகனங்களைப் பாதுகாக்கும்.காரின் நிறம் மற்றும் புதுத் தன்மையைப் பாதுகாக்க உதவும். எனவே முழுமையாக மூடக் கூடிய கவர்களை மழை மற்றும் வெயில் காலங்களில் பயன்படுத்துவது அவசியமானதாக பார்க்கப்படுகின்றது.
வடிக்கட்டி (air purifier)
மழைக் காலங்களில் அடைக்கப்பட்ட அறைகளில் இருந்து ஓர் விதமான துர்நாற்றம் வருவது பொதுவான ஒன்று. ஈரபதத்தினால் இதுமாதிரியான துர்நாற்றங்கள் வீசக்கூடும். இந்த மாதிரியான துர்நாற்றங்கள் கார்களில் சில நேரங்களில் வரக் கூடும். அவற்றை வெளியேற்ற காற்று வடிகட்டிகள் பயன்படுகின்றன.
காருக்குள் இருக்கும் காற்றை வடிகட்டவும் அவை உதவுகின்றன. காருக்குள் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க காற்று வடிகட்டியை பயன்டுத்துவது அவசியமான ஒன்றாகும்..
ஆன்டி ஃபாக் மெம்ப்ரேன் (Anti Fog Membrane)
அடுத்ததாக, இது பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளை, இன்னும் தெளிவான பார்வை திறனை வழங்கும் வகையில் மாற்றக் கூடிய ஓர் அம்சமாகும். கண்ணாடிகளில் விழும் மழை துளிகள் புள்ளி புள்ளியாக தேங்கி நின்று பின் பக்கத்தை பார்ப்பதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த ஆன்டி ஃபாக் மெம்ப்ரோன் தன்மீது விழும் மழை துளி மற்றும் பனி துளி ஆகியவற்றை வழுக்கி ஓட செய்யும். ஆகையால், தெளிவான பார்வை என்பது உறுதி. இதனை கண்ணாடியில் ஒட்டுவது மிகவும் சுலபம். பின்னால் வரும் வாகனங்களை மிகவும் தெளிவாகக் காண இது உதவும்.
வேக்ஸ் (Rain repellent wax)
வைப்பர் இல்லாமல் விண்ட்ஸ்கிரீன் மீது விழும் மழை நீரை அகற்ற பயன்படுத்துவது 'பிரத்யேக வேக்ஸ்' இந்த வேக்ஸ் ஆனது விழும் மழை நீரை வழுக்கி ஓட செய்யும். வாட்டர் ரெசிஸ்டன்ட் லேயரைப் போல் இது செயல்படும். ஆகையால், மழை காலத்தில் இந்த வேக்ஸை விண்ட்ஸ்கிரீன் மீது பயன்படுத்துவது மிக சிறந்தது.
ப்ளூர் மேட் (Floor mat)
மழைக் காலத்திற்கு ஏற்ற ஃப்ளூர் மேட்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவை காரின் உட்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உதவும். முழுமையாக நனைந்த படி நாம் உள் நுழையும்போது நம் மீதிருந்து வழியும் நீரை உறிஞ்சும் கொள்ளும் வசதிக் கொண்ட மேட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
ஆன்லைனில் ஃப்ளூர் மேட்களை மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றன.