தலையில் பட்டை பட்டையாக பொடுகு தொல்லையா? இந்த பொருள் இருந்தா போதும்
தலையில் முடி அதிகம் கொட்டுவதற்கு ஓர் காரணமாக இருப்பது பொடுகு தான். தற்போது மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, பொடுகுகளாக மாறுகின்றன.
இப்படி பொடுகுகள் அதிகரிப்பதால், மயிர்கால்கள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கின்றன.இதை கண்டுகொள்ளாமல் விட்டால் அது பூஞ்சையாக மாறி தலையில் தீங்கை விளைவிக்கும்.
இதை தடுக்க பல இரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல இதை இயற்கையில் காணப்படும் சில பொருட்களை கொண்டு இல்லாமல் செய்ய முடியும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொடுகு தொல்லை
வீட்டில் இருக்கும் தயிர் பொடுகை போக்குவதில் சிறந்த பங்கு வகிக்கிறது. இதில் அதிக பக்றீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றது. இதன் மூலம் கிடைக்கும் குளிர்ச்சியான உணர்வு உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து பொடுகுத்தொல்லையை நீக்கும்.
தயிரில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. பொடுகினால் தடைபட்டு இருக்கும் பொடுகுத்தொல்லையை இதன் மூலம் சரிசெய்து மீண்டும் முடி வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்.
இது தவிர தலைமுடி வறட்ச்சியாக இருந்தால் இந்த தயிர் அதற்கு ஊட்டமளித்து பளபளப்பை மீட்டு கொடுக்கும். தயிரில் காணப்படும் புரதங்கள் பழுதடைந்த தலைமுடியை வேரிலிருந்து நுனி வரை ஊட்டமளிக்கின்றன.
உங்களுக்கு வறண்ட, எண்ணெய் அல்லது சாதாரண தலைமுடி இருந்தாலும், தயிரை ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது சிறந்த பலனை தரும்.
அதிகமாக வெளியில் சென்றுவேலை செய்பவர்கள் தயிரை தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு 3 முறை தலையில் அப்பிளை செய்து கழுவி வந்தால் உண்மையில் சிறந்த பலனை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |