இந்த உணவு பழக்கங்கள் கூட முடி உதிர்விற்கு காரணமாக இருக்கலாம்
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் ஆரோக்கியமான, வலுவான மற்றும் பளபளப்பான முடி இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
இப்படியான கூந்தலை விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பார்கள்.
மாறாக சருமம் போலவே தலைமுடிக்கும் நாம் அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பராமரிப்புகள் வழங்கும் போது கண்டிப்பாக தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதை குறைக்கலாம்.
அதிகமான மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் போன்ற காரணங்கள் தலைமுடி உதிர்வை அதிகப்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை அதிகப்படுத்தும் பழக்கங்கள் பற்றி பார்க்கலாம்.
தலைமுடி உதிர்வு
1. சர்க்கரை
சர்க்கரை அதிகமாக சாப்பிடும் பொழுது நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இதனால் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினர்களுக்கும் வழுக்கையை உண்டு பண்ணும். இதன்படி, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
2. உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள்
உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் இன்சுலின் ஸ்பைக்கை ஏற்படுத்துகின்றன. இது சுத்திகரிக்கப்பட்ட மாவு, ரொட்டி மற்றும் சர்க்கரை போன்ற உணவுகளிலிருந்து ஏற்படுகின்றது. இதனால் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு தலைமுடி உதிர்வு அதிகமாகலாம். அத்துடன் இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன்களின் ஸ்பைக்கை உருவாக்கலாம்,
3. ஆல்கஹால்
கெரட்டின் என அழைக்கப்படும் புரதத்தால் ஆனது தான் தலைமுடி. இது தலைமுடி கட்டமைப்பிற்கு மிகவும் அவசியமான புரகமாக பார்க்கப்படுகின்றது.இது உடலில் குறையும் பட்சத்தில் தலைமுடி உதிர்வு, பளபளப்பின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பொதுவாக ஆண்கள் இது போன்ற பானங்கள் அதிகமாக எடுத்து கொள்வார்கள். இது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வை உருவாக்கி உரோமக்கால்களை சிதைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |