அட்டகாசமான சுவையில் சிக்கன் உப்பு கறி... ஈஸியாக செய்வது எப்படி?
அசைவம் என்றாலே சிக்கனுக்கு தான் முக்கியத்துவம் கிடைக்கும். அதிலும் சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி என்று சொல்லிக் கொண்டே செல்லும் அளவுக்கு அத்தனை வகை உண்டு.
சிக்கனை ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிட்டால் அழுப்பாக மாறிவிடும். அதனால் சற்று புது மாதிரியாக ட்ரை செய்து பார்க்கலாம். தற்போது சிக்கன் உப்பு கறி எப்படி செய்றதுனு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1 கிலோ
- சின்ன வெங்காயம் - 20 துண்டு
- வரமிளகாய் - 25
- பூண்டு - 10
- கரம் மசாலா - 2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது
- கருவேப்பிலை
- நல்லெண்ணெய்
- மிளகுத்தூள்
- உப்பு
- மிளகாய்த்தூள்
- சோம்பு
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். கழுவி வைத்த சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு மற்றும் மிளாகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பின்னர் ஒரு கடாயில் நல்எண்ணெய்யை ஊற்றி அதில் சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கியாப்பின் 10 பல் பூண்டு மற்றும் சிக்கனை சேர்க்கவும்.
நன்கு வதங்கிய சிக்கனில் மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கினால் சுவையான சிக்கன் உப்பு கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |