முடி வளர்ச்சிக்கு இனி விலை உயர்ந்த ஷாம்புகள் வேண்டாம்! அரிசி கழுவிய நீர் இருக்கா?
முடி உதிர்தல் மற்றும் டிரையான முடி உள்ளவர்களுக்கு அரிசி நீர் மிகவும் சிறந்தது.
வாரத்திற்கு இரு முறை இந்நீரை முடிக்கு தேய்க்கும் போது முடியில் நீரேற்றத்தை அதிகரிக்கிறது.
முடியில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்வதோடு முடியை பளப்பளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
அரிசி கழுவிய நீர் எப்படி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது?
அரிசி கழுவிய நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.
இதில் உள்ள ஃபெருலிக் அமிலம் காரணமாக இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ங்களும் கூந்தலுக்கு வலு சேர்க்கின்றன.
இதனால் இயற்கையாகவே முடி வளர்ச்சி அடைகிறது.
எனவே ஒரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அரிசியை ஊறவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது சாதம் வடித்த வடி தண்ணீரையும் எடுத்து கொள்ளலாம்.
பயன்படுத்துவது எப்படி?
கூந்தலுக்கு அரிசி கழுவிய நீர் பயன்படுத்தும் போது அரிசி நீரை ஊறவைத்து குறைந்தது 7 மணி நேரமாவது ஊற வையுங்கள்.
பிறகு அந்த மேலான நீரை வடித்து விடுங்கள். தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்திய பின்பு இந்த நீரை தலை முழுவதும் மயிர்க்கால்கள் முதல் நுனிகால் வரை தடவி 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.
பிறகு இந்த நீரை கொண்டு கூந்தலை அலசுங்கள். மீண்டும் பத்து நிமிடங்கள் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசி விடுங்கள்.
இத்தண்ணீரை வாரத்திற்கு 2 முறையாவது தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
எனவே விலையுயர்ந்த கெமிக்கல் கலந்தவற்றை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் முடியை வளர்க்க அரிசி நீரை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.