தரையை தட்டும் அளவிற்கு முடி வளரவேண்டுமா? இதை மறக்காமல் செய்திடுங்கள்
அரசி கழுவிய தண்ணீரில் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. அதில் விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களும் அடங்கியிருக்கின்றது.
இதனால் தான் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அரிசி தண்ணீர் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ஜப்பானிய பெண்கள் ஒரு காலத்தில் தரையை தட்டும் அளவிற்கு நீளமான முடியைக் கொண்டிருந்ததாகவும், அரிசி நீரில் குளித்து ஆரோக்கியமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரிசி நீர்
அரிசியை கழுவும் போது கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கழுவிய அரசியைப் போட்டு 12 மணிநேரம் அறை வெப்ப நிலையில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். அரிசி கழுவிய நீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் விட்டமின் ஈ ஆகியவை நிறைந்த காணப்படுகிறது.
இதில் புளித்த அரிசி நீரில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி மற்றும் தோல் செல் சேதத்தை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டது.
குளிக்கும் போது ஷாம்பு போட்ட பிறகு, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் தடவி 15-20 நிமிடங்களுக்கு இயற்கையாக உலர வைத்து, பின்னர் சாதாரண நீரில் கழுவினால் அரிசியில் இருக்கும் விட்டமின் பி சத்து முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.