தினமும் இந்த அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பவரா? அப்போ உங்க உடலுக்கு இந்த பேராபத்துகள் நேரலாம்
தண்ணீர் அருந்துவது என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். நாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது.
8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர்.
இதை செய்யாவிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து காண்போம்.
தண்ணீர் உடலின் சக்திக்கான முக்கிய பொருள்.
தண்ணீர் பற்றாமை என்னஸம் செயல்பாட்டினை உடலில் குறைத்துவிடும்.
இதனால் சோர்வு அதிகமாய் ஏற்படும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக நச்சுப் பொருட்கள், ஆசிட் கழிவு இவை தேங்குவதால் கிருமிகள் தாக்குதல் சிறுநீரகம், சிறுநீரகப்பையில் ஏற்படும்.
கூடவே வீக்கம், வலி ஏற்படும். மூட்டுகளுக்கு அதிக நீர்சத்து தேவை. நீர்சத்து குறையும் பொழுது மூட்டுகள் பலவீனப்படும், மூட்டு கடினப்படுதல், மூட்டு வலி ஆகியவை ஏற்படும்.
ரத்தம் 92 சதவீதம் நீர் கொண்டது. நீர் குறையும் பொழுது ரத்தம் கடினப்படுகின்றது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.
சருமம் உடலின் நச்சுப் பொருட்களையும், கழிவுகளையும் கூட வெளியேற்றும் வேலையினைச் செய்கின்றது. நீர் சத்து உடலில் குறையும் பொழுது சருமம் பல வகையான சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.