முடி அடர்த்தியாக வளர இந்த உணவுகள் கட்டாயம்
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் நீங்கள் உண்ணும் உணவிலேயே அதிகம் சத்தான உணவுகளை சாப்பிட்டால் முடி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
முடி வளர்ச்சிக்கு வைட்டமின் பி உணவுகள்
வைட்டமின் பி அதாவது பயோடின் சத்து இது முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான முடிக்கு பெரும் பங்காற்றுகிறது. இந்த பயோட்டின் சத்தானது முடியின் மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொண்டு சென்று தலைமுடியை ஆரோக்கிமாக வளர உதவுகிறது.
இந்த பயோட்டின் சத்துக்களைப் பெற நீங்கள் சாப்பிட வேண்டியது இவைதான்.
பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் இதில் இருக்கும் கல்சியம் சத்துக்களும் பயோட்டின் சத்துக்களும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
முட்டையிலும் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் முடிவளர்ச்சியை தூண்டி முடியை வலிமையாக்குகிறது.
பச்சை இலை காய்கறிகளிலும் வைட்டமின் பி சத்து அதிகளவில் இருக்கிறது இதுவும் முடி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை கொடுக்கும்.
பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகளில் பி வைட்டமின்கள் இருப்பதால் அவை முடி வளர்ச்சியை அதிகம் ஊக்கப்படுத்தும்
பாதாம் அல்லது சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
சிறுதானியங்களில் இருக்கக்கூடிய பி வைட்டமின்கள் தலைமுடியை வலுவாக்கும்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் பி உறிஞ்சுதலை அதிகப்படுத்தி முடி வளரச்சியை அதிகப்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |