முடி கொட்டாமல் காடு மாதிரி வளர இதை கட்டாயம் குடிங்க! 7 நாட்களில் தீர்வு
ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் முடிக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. அதிலும் இந்த முடியால் பலருக்கு பல பிரச்சினைகள் எப்போதும் இருந்துக் கொண்டேதான் இருக்கும்.
முடி உதிர்தல், பொடுகு பிரச்சினை, நரைமுடித் தொல்லை என பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
இவற்றைப் பராமரிப்பதற்காக பல வழிகளில் பலர் முயற்சிப்பார்கள். இயற்கையாகவும், பக்கவிளைவுகள் அல்லாத தீர்வுகளைதான் நாம் தேட வேண்டும்.
அப்படி உங்கள் முடி பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுப்பது தான் இந்த பவர் ஹேர் ஸ்மூத்தி.
தேவையான பொருட்கள்
சியா விதைகள் - 2 மேசைக்கரண்டி
ஆளி விதைகள் - 2 மேசைக்கரண்டி
சூரியகாந்தி விதைகள் - 2 மேசைக்கரண்டி
பூசணி விதைகள்- 2 மேசைக்கரண்டி
தாமரை விதைகள் அல்லது மக்கானா- 2 மேசைக்கரண்டி
பேரீச்சம்பழம் - 2
பாதாம் ஒரு கைப்பிடியளவு [ஊறவைத்த]
செய்முறை
எடுத்துக் கொண்ட எல்லா விதைகளையும் வாசனை வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
நன்றாக வறுத்தப் பிறகு மிக்ஸியில் தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த தூளை காற்று புகாத படி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
இந்தப் பொடியில் இரண்டு கரண்டி பேரீச்சம்பழத்தையும், ஒரு கைபுடி அளவு பாதாமையும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து வைத்துக் கொண்ட பொடியை அரை மணிநேரம் தலைமுடியில் தடவி நன்றாக அலசினால் சிறந்த பலன்களை நீங்களே உணர்வீர்கள்.