தினமும் பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
நம்மில் பலருக்கு பூசணிக்காய் என்றால் பெரிதாக பிடிக்காது.
அதிலும் அதிலுள்ள விதைகளை உடனே நீக்கிவிட்டுத்தான் சமைப்பார்கள்.
ஆனால், பூசணி விதைகளிலுள்ள சத்துக்கள் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை.
பூசணி விதைகள் பல நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
மருத்துவ குணங்கள்
- இரும்புச்சத்து, நார்ச்சத்து,புரதம், விட்டமின் ஈ ஆகிய சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
- நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்ற நோய்களை குணமாக்க வல்லது.
- உடம்பிலுள்ள இரத்த அழுத்தம், உடல் எடையைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைக் காக்கும்.
- பூசணி விதையிலுள்ள துத்தநாகச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- மாதவிடாய் வலி, வெள்ளைப்படுதல் பிரச்சினைகளை வராமல் தடுக்கும். உடல் வலிமை அதிகரிக்கும்.
தினமும் இரவில் பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டால் மன அழுத்தம் குறைவதுடன் தூக்கமும் சீராக இருக்கும் என பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தினமும் 2 கிராம் அளவில் பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயம் குறைவாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கீல்வாதம் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் பெற பூசணிக்காய் விதைகள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
சூப் அல்லது சாலட்டுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் தேகம் உட்பட முடி வளர்ச்சியையும் மேம்படுத்தும்.