மன அழுத்தத்தால் முடி கொட்டுகிறதா? கவலையே வேண்டாம் இந்த டிப்ஸ் உங்களுக்காகத்தான்!
பொதுவாக இன்றையக் காலக்கட்டத்தில் மன அழுத்தம் என்பது பொதுவான விடயமாகி விட்டது சிறியவர் முதல் பெரியவர் வரை மன அழுத்தம் என்பது பொதுவான விடயமாகி விட்டது.
மன அழுத்தத்தின் காரணமாக உடலில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும் அதில் ஒன்று தான் இந்த முடி கொட்டுதல் பிரச்சினை.
மன அழுத்தம் ஒருவருக்கு எப்படி பெரிய பிரச்சினையோ அதுபோலத்தான் முடி கொட்டுதல் பிரச்சினையும் பெரிய பிரச்சினைதான். இதற்கு வைத்தியர்களின் மருத்தவம் இல்லாமல் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை வைத்து குணமாக்கி விடலாம்.
சிறந்த தீர்வுகள்
முடி கொட்டுதல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழும்பு அமிலங்கள் ஊட்டச்சத்து கொடுக்கும்.
இந்த தேங்காய் எண்ணெய்யை தலைமுடியின் நுனி வரைத்தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊறவத்து பின்பு தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தால் முடி அடர்த்தியாக வளர்க்கும்.
கற்றாழையும் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் கற்றாழை சாற்றை முடியின் நுனி வரை தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து ஷாம்பு போட்டுக் கழுவலாம்.
முடி வளர்ச்சிக்கு ஆர்கான் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. இந்த எண்ணெய்யை ஷாம்பு போட்டு குளித்தப்பின் பயன்படுத்த வேண்டும்.
வெங்காய சாறானது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும். அதனால் வெங்காய சாற்றை தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து ஷாம்புவை முடியை அலசலாம்.