சோற்று கற்றாழையை அதிகமாக பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழை பெயர் போன செடியாகும். முடி மற்றும் தோல் பராமரிப்பு என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், சோற்றுக்கற்றாழையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை பற்றி இங்கே பார்ப்போம். சோற்று கற்றாழையை அதிகமாக உட்கொண்டு அதை சருமத்தில் பயன்படுத்தினால் சரும அலர்ஜி ஏற்படும்.
இதன் காரணமாக சொறி, அலர்ஜி, தோல் சிவத்தல், தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். அடுத்து, உடல் எடையை குறைக்க பலர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாற்றை உட்கொள்கின்றனர்.
இதனால் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கற்றாழையை தொடர்ந்து உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
கற்றாழை சாற்றை தொடர்ந்து உட்கொள்வதால், உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கலாம். இதன் காரணமாக நீங்கள் பதற்றம் அடையலாம். இதனுடன், பலவீனமும் உணரப்படலாம்.