கை வைத்தவுடன் கைகளில் முடி வருதா? இந்த பொருட்கள் ஒரு கைப்பிடி போதும்
தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
இதற்கு ஒரு தீர்வாக தான் அழகுக்கலை நிபுணர் ஒரு சிம்பிளான வீட்டு வைத்தியம் கூறியிருக்கிறார். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்வு ஹேர் ஃபேக்
முடி உதிர்வு ஏற்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றன. பலர் இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தான் என கூறுகின்றனர்.
இருந்தும் தலைமுடி பராமரிப்பு என்ற ஒன்று உள்ளது. இதை சரிவர செய்தால் மட்டுமே நமது தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலை முடிக்கு வாரம் ஒரு முறை ஹேர்பேக் போட்டு சீராக பராமரித்தால் தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தி விட முடியும் என அழகுக் கலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதற்கு இரசாயனங்கள் கலந்த ஹேர்பேக் பயன்படுத்துவதை விட இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகளை தடுக்கும். இதற்காக வீட்டிலேயே ஹேர்பேக் தயாரித்து எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு துளசி, வேப்பிலை, மருதாணி, பெரிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலைகள் மற்றும் கருப்பு உளுந்து ஆகிய அனைத்தையும் காய வைத்து, அரைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் இயற்கையான ஹேர்பேக் பொடி கிடைக்கும். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும். இந்தப் பொடியை தலைக்கு தேவையான அளவு எடுத்து, அத்துடன் சிறிது தயிர் கலந்து தேய்க்க வேண்டும்.
அதன் பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
இதை அதிகமாக முடி உதிர்தபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையும் தேய்க்கலாம். இதை தேய்க்க முன்னர் தலையை நன்கு பெரிய பற்கள் உள்ள சீப்பால் சீவிய பின் போடுவது நல்லது.